Thursday, July 28, 2011

தமிழ் தட்டச்சு தளங்கள்

1.அழகி மென்பொருள் : http://azhagi.com/docs.html
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள்

2. google தட்டச்சு தளம் : http://www.google.com/transliterate/indic/Tamil
தமிழ் மட்டுமன்றி இன்னும் பல இண்டிக் மொழிகளில் தட்டெழுதக்கூடிய ஒரு தளம்

3.இரு திரை தட்டச்சு தளம் :http://www.alltamil.com/unicode.html
எளிமையாக தமிழில் தட்டச்சு செய்ய சிறந்த மற்றொரு தளம்  

 குறிப்பு:
தமிழில் தட்டச்சு செய்ய, அதற்கு இணையான ஆங்கில எழுத்துகளை அறிந்துகொள்வது அவசியம்.
இந்த தளம் அதற்கான முழு விளக்கங்களை அளிக்கிறது.

மனிதர்கள் (எனது "காந்திபுரம் பஸ்ஸ்டேண்ட் பக்கத்துல" கதையிலிருந்து)

என்ன மனுஷ வாழ்க்கை இது?
ஏதோ அலார கடிகாரம் மாதிரி, அப்பப்போ எழுப்பிவிட்டுகிட்டே இருக்குற மனிதர்கள்
நம்மை சுற்றியும்.
நம்மை நம்ம இஷ்டத்துல வாழவிட மாட்டீங்கறாங்க.

பல ஆயிரம் சம்பாதிக்கறவனும்,நாளுக்கு 10 ரூபாய் சம்பாதிக்கறவனும்
எத்தனையோ விஷயங்கள்ல வேறுபடுறாங்க. ஆனா தேவைகள் ஆளாளுக்கு
வேறுபடுற மாதிரி இருந்தாலும், எல்லாமே இருக்குற எடத்துல இருந்து இளநீர் பறிக்கிற முயற்சி தான்.
பல ஆயிரம் சீக்கிரம் பறிச்சுடுது. ஆனா பத்துகளுக்கு கொஞ்சம் காலம் பிடிக்குது.

பல வித மனிதர்கள் பலவித கண்ணோட்டங்கள்!! எல்லா வித மனிதர்களையும் அனுசரித்து வாழப் பழகுவது
கூட தனி
பட்டப் படிப்பு தான்!!

Thursday, July 21, 2011

கேள்வியும் பதிலும் - rajkumar

கேள்வி by Tamil (Facebook):
ஆண்கள் தோடுஅணியமுடியும் , மூக்குத்தி அணிய முடியும், முடிவளர்க்க முடியும். அப்படியானால் பெண்கள் ஜீன்ஸ்/ நீளக்காற்சட்டை,குறுகிய காற்சட்டை அணிவது தவறா? பெண்கள் முடியை கட்டையாக வெட்டுவது தவறா? ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதியா? ஆண்கள் மது அருந்த முடியும், ஆண்களில் பலர் வெளியே சொல்லாவிட்டாலும் ஏகபத்தினி விரதமிருப்பவர்கள் அல்ல, ஆனா...ல் பெண்கள் அவற்றைச் செய்தால் கண்டிப்பது எதற்காக? தமிழர் பண்பாடு எது? அது ஏற்கனவே சீரழிந்துவிட்டதா? / அல்லது அப்படியே இருக்கிறதா? பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது ஆண்களா? பெண்களா? 
பதில் by rajkumar
உலகம் தோன்றிய பிறகு, மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து சிந்திக்கத் துவங்கினான்.
வேட்டையாட ஆண்கள் வெளியே சென்ற பிறகு தனிமையைப் போக்க பெண்கள் கண்டுபிடித்தவை
தான் விவசாயம்,விலங்குகள் வளர்ப்பு.
இப்படியாக உணவிடுதல் முதல் சந்ததியைப் பெருக்குவது வரை பெண்களின் பங்களிப்பு
உயர்ந்தது என் ஆடவன் கருதினான்.ஆகவே,பெண்களைத் தலைவியாகக் கொண்ட ஆட்சிமுறை வழக்கத்தில்
இருந்தது.பெண்களின் அதீத ஆட்சிப்போக்கும்,மோகவலை கொண்டுஅடிமைப்படுத்தும் நோக்கமும்
அவர்களை வீட்டிலேயே அடிமையாக நட்த்த வகை செய்தது.காலம் கடந்தது.
இன்றும்,அவர்களின் உரிமை வேண்டி போராடியவர்களே வெட்கப்படும் அளவுக்கு பெண்களின்
நாகரிக மாற்றங்கள் இருப்பது நாம் அறிந்ததே!!
ஆக,மொழி-பண்பாடு-நாடு என அனைத்தையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் அங்கு இருப்பது
ஆதிவாசிப் பெண்ணும், அவளது மெத்தனப்போக்கும் தான்.சம உரிமை கொடுப்பது தவறில்லை.
அதனை பெண்கள் உணராமல் நடப்பது தான் தவறு!!
பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது பெண்கள்தான்!!!
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!!

இந்தியனுக்கு ஒரு கடிதம் - அப்துல்கலாம் (ஆங்கில உரையின் தமிழாக்கம் - by ராஜ்குமார்)

ஊடகங்களின் எதிர்மறைப் போக்கு!
நாம் இந்தியா என்ற மிகச்சிறந்த நாட்டில் பிறந்திருக்கிறோம்.ஆனால் அதை மறந்து இன்னும் நம் வலிமையையும்,
பெருமையையும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பால் உற்பத்தியில் முதலிடம்!
தொலை உணர்வு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முதலிடம்!
உலகளவில், கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் இரண்டாமிடம்!
இதுபோல,எத்தனையோ வெற்றி வரலாறுகள் நம் மண்ணுக்கு இருக்கின்றன,ஆனால்,அதை நினைத்துப் பார்க்க யாரும் முனைவதில்லை.
அது ஏன்?
Dr.சுதர்சன் அவர்கள்,அடிப்படை வசதிகளற்ற ஒரு கிராமத்தை,தனது முயற்சியால்,தன்னிலைபாடு கொண்ட,தனிப்பெறும்
சக்தியாக மாற்றியிருக்கிறார்.ஆனால், நமது ஊடகங்களுக்கு அது கண்ணில் படவில்லை. தீய நிகழ்வுகள்,தோல்விகள்,பேரழிவுகள் மட்டும் தான் அவர்களை
கவருகின்றன.

ஒருநாள் நான், இஸ்ரேலில் உள்ள "டெல்-அவீவ்"என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன்! முந்தைய நாள் தான் குண்டுவீச்சுகள் மற்றும்
தொடர் தாக்குதல்களால்,பல உயிர்களை இழந்து,பரிதாபமான நிலையில் இருந்தது.
ஆனால்,அந்நாட்டு செய்தித்தாளின் முதல்பக்கத்தில் இடம்பிடித்த செய்தி எது தெரியுமா?
ஐந்து ஆண்டுகளில் தனது பெருமுயற்சியால்,பாலைவனத்தை ஆர்க்கிட் பூக்கள் நிறைந்த
சோலையாகவும்,தானியங்கள் கொழிக்கும் கிடங்காகவும் மாற்றிய "ஜெவிஷ் " என்ற பெரும் மனிதரின்
புகைப்படம் தான்!! இதுவல்லவா அழிவில் வாடும் மக்களுக்கு ஆறுதலாகவும்,தூண்டுதலாகவும் இருக்கும்?
அதை விடுத்து வெறும் சிதைந்த நாட்டினைப் பற்றி பக்கம் பக்கமாய் எழுதி இருந்தால்,அச்செய்தி
இறந்த மக்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டிருக்கும்!

ஆனால்,நம் இந்தியாவில் மக்கள் விரும்பிப் படிப்பவை கொலை,கொள்ளை,தீவிரவாதம் போன்ற எதிர்மறை செய்திகளாகத் தானே இருக்கின்றது?
இந்நிலை முதலில் மாற வேண்டும்
இன்னுமொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

நமது நாட்டில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது மக்கள் அளவுகடந்த மோகம் கொண்டிருப்பது ஏன்?
தொலைக்காட்சிகள்,உடைகள் என இறக்குமதியாகும் பொருள்கள் மீது நாம் ஏன்
அவ்வளவு ஆர்வம் கொன்டுள்ளோம்?

சுய மரியாதை என்பது சுய சார்பு என்ற நிலையிலிருந்து தான் வருகிறது என்பதை
நாம் ஏன் உணர மறுக்கிறோம்?

நான் ஐதராபாத்தில் இதைப் பற்றி எனது உரைக்குப் பின்னர்,
ஒரு சிறுமி எனது கையெழுத்து வேண்டுமெனக் கேட்டாள்.
அந்தக் குழந்தையிடம்,"உனது வாழ்நாள் கனவு என்ன?" எனக் கேட்டேன்.
"ஒரு வளர்ந்த இந்தியாவில் வாழ வேண்டும்" என்று பதில் சொன்ன அந்தச் சிறுமியிடம்,
உன்னைப்போன்றோரும்,என்னைப்போன்றோரும் தான் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்
என நான் கூறி வந்தேன்!

நமது அரசு திறனற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
நமது சட்டங்கள் மிகவும் பழையன என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
தொடர்வண்டி நிலையங்களைக் கேலிக்குரியவை என்றும்,
அனுப்பும் அஞ்சல்கள் பெறுநர் முகவரிக்குப் போய்ச் சேருவதில்லை என்றும்,
நமது விமான நிலையங்கள் உலகிலேயே மோசமானவை என்றும்
நாம் அடிக்கடி கூறிக் கொள்கிறோம்!
நமது நாடு நாய்களிடம் சிக்கியதைப் போல சிதைந்து கிடக்கிறது என்றும் சொல்லிக்கொள்கிறீர்கள்!

இப்படி அனைத்துவகையான நிகழ்வுகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருப்பதைத் தவிர
வேறு என்ன உருப்படியாக நீங்கள் செய்தீர்கள்?
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளைப் போல, நம் இந்தியாவையும் முன்னேற்ற என்ன வழி என்பதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
பொதுச்சொத்துகளைப் பாதுகாத்து, மூடப்பழக்கங்களைக் களைந்து புதிய இந்தியாவை உருவாக்க இனி உழைப்போம்!!

Thursday, July 14, 2011

பொய்யோ? மெய்யோ? - பாரதியார்

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!
நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே! கருதுவதே!
நீங்கள் எல்லாம் அர்த்தமாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
[நிற்பதுவே]

பத்தி 1:
வானகமே! இளவெயிலே! மரச்சரிவே!
நீங்கள் எல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
உடைந்தழிந்தே போனதனால்
நானு ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
[நிற்பதுவே]

பத்தி 2:
காலமென்றே ஒரு நினைவும்,
காட்சி என்று பல நினைவும்,
கோலமும் பொய்களோ?
அந்த குணங்களும் பொய்களோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால்,
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானு ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
[நிற்பதுவே]

Friday, July 8, 2011

கணிணி கலைச்சொற்கள்

Computer - கணினி / கணிப்பொறி
Key board - விசைப்பலகை
Software - மென்பொருள்
Application Software - பொதுபயன்பாட்டு மென்பொருள்
Hardware - வன்பொருள்
Screen - திரை
Laptop - மடிக்கணினி
Central Processing Unit - மையச் செயலகம்
Compact Disk - இறுவட்டு/குறுவட்டு
Memory - நினைவகம்
RAM -தற்காலிக‌ நினைவகம்
Control Unit - கட்டுப்பாட்டகம்
registers - பதிவகம்
microprocessor - நுண்செயலகம்
Operating System - இயக்கு தளம்
Digital - எண்ணிமம்
Pointer - சுட்டி
Mouse - சொடுக்குபொறி
Binary Numbers ( 0, 1 )- இரும எண்கள் / துவித‌ எண்கள்
Internet - இணையம்/ இணையத்தளம்
Networking - வலைப்பின்னல் / வலையமைப்பு
Browser - உலாவி
Printer - அச்சுப்பொறி
Server - வழங்கி
Internet Server - இணைய வழங்கி
IC ( Integrated Circuit) - ஒருங்கிணைச் சுற்று
Data - தரவுகள் / Datum - தரவு
Command - கட்டளை
Button - பொத்தான்
Input - உள்ளிடு
Battery/Cell - மின்கலம்
File - கோப்பு
Output - வெளியீடு
e-mail - மின்னஞ்சல்
Download - பதிவிறக்கம்
Multi-media - பல்லூடகம்
Compiler/ interpreters - நிரல்மொழிமாற்றி
High Level Language - மேல்நிலை நிரல்மொழி
Low Level Language - கீழ்நிலை நிரல்மொழி
Source Language/ Source Code - மூல மொழி
Machine Language - பொறி மொழி
Executable Program - நிறைவேற்றத்தகு நிரல்
Execute - நிறைவேற்று
Source Code Optimizer - மூல மொழி ஊகவுறுத்தி
Code Generator - குறிமுறை இயற்றி/நிரல் இயற்றி
Target Code Optimizer - பெயர்ப்பு மொழி ஊகவுறுத்தி
Tool Bar - கருவிப்பட்டை
IT (information Technology) - தகவல் தொழில்நுட்பம்
Interface- இடைமுகம்/இடைமுகப்பு
table -அட்டவணை
List - பட்டியல்
object oriented language - பொருள்நோக்கு நிரல்மொழி
Data Base - தரவுத்தளம்
Free/Open - கட்டற்ற
Function - செயற்கூறு
SIM card - சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு அட்டை