Thursday, July 14, 2011

பொய்யோ? மெய்யோ? - பாரதியார்

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!
நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே! கேட்பதுவே! கருதுவதே!
நீங்கள் எல்லாம் அர்த்தமாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
[நிற்பதுவே]

பத்தி 1:
வானகமே! இளவெயிலே! மரச்சரிவே!
நீங்கள் எல்லாம் கானலின் நீரோ?
வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
உடைந்தழிந்தே போனதனால்
நானு ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
[நிற்பதுவே]

பத்தி 2:
காலமென்றே ஒரு நினைவும்,
காட்சி என்று பல நினைவும்,
கோலமும் பொய்களோ?
அந்த குணங்களும் பொய்களோ?
காண்பதெல்லாம் மறையுமென்றால்,
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானு ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
[நிற்பதுவே]

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்