Thursday, July 21, 2011

இந்தியனுக்கு ஒரு கடிதம் - அப்துல்கலாம் (ஆங்கில உரையின் தமிழாக்கம் - by ராஜ்குமார்)

ஊடகங்களின் எதிர்மறைப் போக்கு!
நாம் இந்தியா என்ற மிகச்சிறந்த நாட்டில் பிறந்திருக்கிறோம்.ஆனால் அதை மறந்து இன்னும் நம் வலிமையையும்,
பெருமையையும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பால் உற்பத்தியில் முதலிடம்!
தொலை உணர்வு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முதலிடம்!
உலகளவில், கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியில் இரண்டாமிடம்!
இதுபோல,எத்தனையோ வெற்றி வரலாறுகள் நம் மண்ணுக்கு இருக்கின்றன,ஆனால்,அதை நினைத்துப் பார்க்க யாரும் முனைவதில்லை.
அது ஏன்?
Dr.சுதர்சன் அவர்கள்,அடிப்படை வசதிகளற்ற ஒரு கிராமத்தை,தனது முயற்சியால்,தன்னிலைபாடு கொண்ட,தனிப்பெறும்
சக்தியாக மாற்றியிருக்கிறார்.ஆனால், நமது ஊடகங்களுக்கு அது கண்ணில் படவில்லை. தீய நிகழ்வுகள்,தோல்விகள்,பேரழிவுகள் மட்டும் தான் அவர்களை
கவருகின்றன.

ஒருநாள் நான், இஸ்ரேலில் உள்ள "டெல்-அவீவ்"என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன்! முந்தைய நாள் தான் குண்டுவீச்சுகள் மற்றும்
தொடர் தாக்குதல்களால்,பல உயிர்களை இழந்து,பரிதாபமான நிலையில் இருந்தது.
ஆனால்,அந்நாட்டு செய்தித்தாளின் முதல்பக்கத்தில் இடம்பிடித்த செய்தி எது தெரியுமா?
ஐந்து ஆண்டுகளில் தனது பெருமுயற்சியால்,பாலைவனத்தை ஆர்க்கிட் பூக்கள் நிறைந்த
சோலையாகவும்,தானியங்கள் கொழிக்கும் கிடங்காகவும் மாற்றிய "ஜெவிஷ் " என்ற பெரும் மனிதரின்
புகைப்படம் தான்!! இதுவல்லவா அழிவில் வாடும் மக்களுக்கு ஆறுதலாகவும்,தூண்டுதலாகவும் இருக்கும்?
அதை விடுத்து வெறும் சிதைந்த நாட்டினைப் பற்றி பக்கம் பக்கமாய் எழுதி இருந்தால்,அச்செய்தி
இறந்த மக்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டிருக்கும்!

ஆனால்,நம் இந்தியாவில் மக்கள் விரும்பிப் படிப்பவை கொலை,கொள்ளை,தீவிரவாதம் போன்ற எதிர்மறை செய்திகளாகத் தானே இருக்கின்றது?
இந்நிலை முதலில் மாற வேண்டும்
இன்னுமொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

நமது நாட்டில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது மக்கள் அளவுகடந்த மோகம் கொண்டிருப்பது ஏன்?
தொலைக்காட்சிகள்,உடைகள் என இறக்குமதியாகும் பொருள்கள் மீது நாம் ஏன்
அவ்வளவு ஆர்வம் கொன்டுள்ளோம்?

சுய மரியாதை என்பது சுய சார்பு என்ற நிலையிலிருந்து தான் வருகிறது என்பதை
நாம் ஏன் உணர மறுக்கிறோம்?

நான் ஐதராபாத்தில் இதைப் பற்றி எனது உரைக்குப் பின்னர்,
ஒரு சிறுமி எனது கையெழுத்து வேண்டுமெனக் கேட்டாள்.
அந்தக் குழந்தையிடம்,"உனது வாழ்நாள் கனவு என்ன?" எனக் கேட்டேன்.
"ஒரு வளர்ந்த இந்தியாவில் வாழ வேண்டும்" என்று பதில் சொன்ன அந்தச் சிறுமியிடம்,
உன்னைப்போன்றோரும்,என்னைப்போன்றோரும் தான் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்
என நான் கூறி வந்தேன்!

நமது அரசு திறனற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
நமது சட்டங்கள் மிகவும் பழையன என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
தொடர்வண்டி நிலையங்களைக் கேலிக்குரியவை என்றும்,
அனுப்பும் அஞ்சல்கள் பெறுநர் முகவரிக்குப் போய்ச் சேருவதில்லை என்றும்,
நமது விமான நிலையங்கள் உலகிலேயே மோசமானவை என்றும்
நாம் அடிக்கடி கூறிக் கொள்கிறோம்!
நமது நாடு நாய்களிடம் சிக்கியதைப் போல சிதைந்து கிடக்கிறது என்றும் சொல்லிக்கொள்கிறீர்கள்!

இப்படி அனைத்துவகையான நிகழ்வுகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருப்பதைத் தவிர
வேறு என்ன உருப்படியாக நீங்கள் செய்தீர்கள்?
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளைப் போல, நம் இந்தியாவையும் முன்னேற்ற என்ன வழி என்பதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
பொதுச்சொத்துகளைப் பாதுகாத்து, மூடப்பழக்கங்களைக் களைந்து புதிய இந்தியாவை உருவாக்க இனி உழைப்போம்!!

No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்