காடு, மலை,மேடு கடந்து
இமயத்தின் உயரத்தை நொடியில் தாண்டி,
உயர்ந்த வானத்தின் நீலம் கடந்து,
எதிர்படும் கோள்களை எட்டி உதைத்து,
இருளாய் நிறைந்த வெட்ட வெளியிலே,
விண்வெளி கல்லின் மேலே அமர்ந்து,
மேம்பட்ட வரிகளைப் படைக்கும் ஆற்றல்
கவிஞனுக்கு மட்டுமே உண்டு....