Monday, May 23, 2011

துயர்மிகு காதல்


மிகையாய் வறுத்தவன் வாடி நொந்திருக்க,
பழக நினைத்தவன் பட்டினியாய்க் கிடக்க,
பயில வந்த பைங்கிளி, பல மரங்கள் தாவி ஓடிடின்
பாட்டவன் மனமோ பற்றியெரியுதடி!!





விளக்கம்:

உன்னுடன் ஆரம்பம் முதலே கடலை போட்டவன் கூட வருந்துகிறான்.
உன்னுடன் பேச நினைப்பவனும் துயரத்தில் பசித்துக் கிடக்கிறான்.
கற்க வந்த இடத்தில்,
பார்ப்பவர்களிடம் எல்லாம் சிரித்துப் பேசுவதால், காதலனான எனக்கு மட்டும் எப்படி இருக்கும்?
என் மனமும் பற்றி எரிகிறது.

Thursday, May 19, 2011

இன்றைய தத்துவம்

எதிர்பார்க்கும் போது கிடைக்காத அன்பு - பின்பு
எத்தனை முறை கிடைத்தாலும் அதில் மகிழ்ச்சி இருக்காது!!

*** ** ***
இது சரி, இது தவறு என்பது ஒன்றும் இல்லை.
யார் யார் எப்படி எப்படியோ, அவர் அவர்கள் அப்படி அப்படித்தான்!!

 *** ** ***