Friday, June 17, 2011

இளங்கவிகளே!!

தமிழ்க் கவிதைகளை படைத்து,தமிழ்த்தாயின் பூரண ஆசியைப்பெற்ற அருமை கவி நண்பர்களே!!

ஆதிகாலம் முதல் தமிழின் அடையாளங்களாக இராமாயணமும்,பாரதமும் போல மதத்தழுவல்கள் இருப்பது வேதனை அளிக்கிறது.

கல்கியைப் போல,பாரதிதாசனைப் போல பல அழியா சமூக நாவல்கள்,கவிதைகள் படைக்க வேண்டுகிறேன்.

இன்றைய நாளில், சினிமா சொல்லும் ஆங்கிலம் கலந்த கவிதைகளை ரசிக்கும் கூட்டம் பெருகிவிட்டது!!

யோசிக்க வேண்டுகிறேன்!!

[பாரி] இன்றைய தமிழ்


தமிழில் பேசுவோம்,
தமிழில் மட்டும் பேசுவோம்,
தமிழ் பேசும் உலகம் படைப்போம்.

இன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் வருணனையாளர்கள் நடத்தும் தமிழ்ப் படுகொலைக்கு
அளவின்றி போய் விட்டது.

தமிழில் பேசு அல்லது ஆங்கிலத்தில் பேசு தங்லிஷில் பேசி தமிழை, தமிழின்
எதிர்காலத்தை படு பாதாள குழியில் தள்ளிவிடாதே.

இந்த வருணனை  "மேனாமினுக்கிகள்" செய்யும் மொழி குளறுபடியை நம் இளம் சமுதாயப்
பெண்கள் கௌரவமாக எண்ணுவதும்,  "அந்த மேனாமினுக்கிகள்" பாவனைகளைப் பின்பற்றி
தமிழை நாறடிபதும் நம் தமிழ் மொழி உணர்வை சீண்டிப்பார்க்கிறது.

 முடிந்தவரை இனி பேசும்பொழுது தமிழில் பேசுவோம். நம் தமிழ் மொழி காப்போம்.

அவமானம்:

 தமிழில் பெயர் சூட்டுவது இன்று out of fashion என்கிறார்கள்.
  'ஷா'ணாவிலும் 'ஷி'ணாவிலும் 'ஸ்ரீ','ஜ' போன்ற ஆரிய எழுத்துகளை தவிர்த்து அழகான தமிழ்
பெயர் சூட்டுவோம்.

தமிழில் எழுத்துகளுக்கா பஞ்சம் ?.

 இந்த நிலை நீடித்தால் இன்னும் 20ஆண்டுகளில்  நம் செம்மொழி தமிழ் மொழி
சமஸ்கிருதம் போல் "முன்னொருகாலத்தில்" இருந்த மொழியாகிவிடும்.