* அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
* மனது புண்படும்படி பேசக்கூடாது.
* கோபப்படக்கூடாது.
* சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
* பலர் முன் திட்டக்கூடாது.
* எந்த இடத்திலும் மனைவியை விட்டு
கொடுக்கக்கூடாது.
* முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக
வேண்டும்.
* மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
* சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
* மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க
வேண்டும்.
* பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம்
இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
* வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச
வேண்டும்.
* பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன்
கேட்க வேண்டும்.
* ஒளிவு, மறைவு கூடாது.
* மனைவியை நம்ப வேண்டும்.
* முக்கியமானவற்றை மனைவியிடம் கூற
வேண்டும்.
* தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும்
இருக்கும் என்று எண்ண வேண்டும்.
* உடல் நலமில்லாத போது, உடனிருந்து
கவனிக்க வேண்டும்.
* அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும்
காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட
அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
* நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
* எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி
விட்டு, செல்ல
வேண்டும்.
* மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
* மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* பொய், சூது, மது, மாது போன்ற தீய
பழக்கங்கள் கூடாது.
* மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.
* கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
* சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
* எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
* சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
* சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
* சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
* குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று
ஒதுங்கக்கூடாது.
* மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
* அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை
வைத்து சந்தோசப்படவேண்டும்.
* மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
* ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
* வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
More:
காதலிப்பது எப்படி? (சிரிப்பதற்கு மட்டும்)
More:
காதலிப்பது எப்படி? (சிரிப்பதற்கு மட்டும்)