பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சங்ககால இலக்கியம் முதல்,வாழ்க்கை முறை வரை, தமிழர்களால் உடன்பிறந்த உணர்வாய் பார்க்கப்பட்டது காதல்.ஏதோ மேலைநாட்டுக்காரன் கண்டுபிடித்த அதிசயப் பொருள்போல் இன்றையநாளில் காதலை நினைப்பது நமக்கு வழக்கமாய்ப் போய்விட்டது.
நம்ம விக்கிபீடியா என்ன சொல்லுதுன்னா....
"இது மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம்"
அதை விடுங்கப்பா. இந்த நாளில் கொஞ்சம் சந்தோசமா அவர்களை நினைத்து நகைத்துக் கொள்வோம்!
(இனி வரும் பகுதிகள் இணையத்தில் படித்தவை! -சிரிக்க சிந்திக்க என்ற கோணத்திலேயே இதை நோக்குக)
பகுதி 1 : அந்தநாள் நியாபகம்
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.
வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.
அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.
மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?
20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?
மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?
மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)
கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?
மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?
கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!
இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்!! :)
பகுதி 2 : நம்பிக்கை
"கடைசிக் காட்சி வரை காதலை சொல்லத் தயங்கும் "இதயம்" முரளியை விட,
காதல் நாடகமாடி, கம்பி நீட்டப் பார்க்கும், "நான் அவனில்லை" ஜீவனைத்தான், அதிக பெண்கள் நம்புகிறார்கள்!"
பகுதி 3 : பயம்
"முன்பெல்லாம் லவ் பண்றவங்க, எங்க யாராவது நம்மள பிரிச்சிடுவாங்களோன்னு பயப்படுவாங்க!!!
இப்ப என்னடான்னா! எங்க யாராவது நம்மள சேர்த்து வச்சிடுவாங்களோன்னு பயப்படுறாங்க!!!!"
பகுதி 4: நிறத்தை வைத்து...
இன்று மட்டும் நாம் அணியும் ஆடை நிறத்தை வைத்து நம்மை ஏற இறங்க பார்க்கும் மக்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. யாருய்யா இத கண்டுபிடிச்சானுங்க?
உங்கள் பார்வைக்கு:
Pink : Going to propose.
Orange : Already in love.
Blue : Applications welcomed.
Black : Not interested in love.
Yellow : Failure in love.
Green : Accepted a love.
Red : Already booked.
White : Double sided.
எப்படியோ, இன்னும் 10 மாசத்துல குழந்தைகள் தினம் வருது. இதை மனதில் நிறுத்தி, இந்நாளை கவனமாக அதோடு சிறப்பாகக் கொண்டாடுங்கள்!!
Also Read : "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்!"
இன்றைய காதலர்களுக்காக நான் அடிக்கடி சொல்லும் என் சொந்த தத்துவத்தைச் சொல்லி பதிவை நிறைவு செய்கிறேன்!!
"இளைய சமுதாயத்துக்கு காதல் என்ற வார்த்தை தெரிந்திருக்கிறது.அது நம் பாடப்புத்தகங்கள் போல புரியப்படாமலேயே படிக்கப்படுகின்றன!!"
- அன்புடன் ராஜ்குமார்