( உயிர் எழுத்துகளைக் கொண்டு துவங்கப்பட்ட உண்மை வரிகள்!)
அவளைப்பற்றி எழுதும் முதல் வரியை கற்பனையில் பார்க்கின்றேன்.அதன் பொருள்செறிந்த வார்த்தைகளில் லயித்துவிடுகின்றேன்.அதனைப் படித்துமுடித்து இரண்டாம் வரியை என் பார்வை தீண்டுகையில்,மொத்த வார்த்தைகளும் வரிசை தெரியாமல் மறைந்துவிடுகின்றன.அழியாத நினைவுகளை,உன்னத உணர்வுகளை எழுத்தாய் தீட்டி வைப்பது கடினம்தான்.
இதுவரையில் பேசிய வார்த்தைகள் இரண்டோ மூன்றோதான் இருக்கும்.நேராய் அவள்முகத்தை பார்த்தது கிடையாது.சிலநேரம் கண்கள்,சிலநேரம் அவள் புன்னகை.அவ்வளவுதான்.அவளைப்பற்றி எழுதத் துவங்கி இன்றோடு ஆறுமாதங்கள் நிறைவடைகின்றன.அவ்வப்போது ஒரு வரிக்கவிதை எட்டிப்பார்க்கும்.எழுதிக்கொள்வேன்.
இதயம் விரைவாய்த்துடித்தது,மூச்சு திக்கித்திணறியது என்று சொல்வது உயர்வுநவிற்சி என நினைத்தால்கூட,உண்மை அதுவே.அந்த முதல் சந்திப்பை என்றும் மறக்க முடியாது.அன்று இரண்டொரு வார்த்தைகள்.கொஞ்சம் புன்னகை.ஆறுதலாய் அவள் பார்வை.
அன்றைய என் பயணம்கூட புதிதாய் இருந்தது.பார்க்கும் மனிதர்களும் விந்தையாய்த் தெரிந்தனர்.கனவில் மிதந்தபடி இல்லம் சேர்ந்தேன்.அன்று இரவுத் தூக்கம் தொலைத்து,அவளுடனான கற்பனை உரையாடல்களை அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தேன்.முதல் வரிசையில் அமர்ந்து முழுதாய் ரசித்தவனும் நான் தான்.
அவள் எப்படிப்பட்டவள்?அவளின் கனவுகள் எதைப்பற்றியது?என்ன நினைக்கிறாள் என்னைப் பற்றி?இப்படி பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள்,தினமும் அவளைப் பார்க்கும் நொடிப்பொழுதில் மின்னி மறைகின்றன.
ராஜ்குமார்...
(29-jul-13)