காகித வானம்,
மழையில் நனைகின்றது!
சூரியனும் இல்லை..சந்திரனும் இல்லை
நின்று குடைபிடிக்க!
விண்மீன்கள் இருக்கும் இடம் கூடத் தெரியவில்லை!
வானம் மறைந்து விட்டால்,
கவிதைக்கு எங்கே செல்வேன்?
கண்ணாடிக் குடையுடன் எழுகின்றேன்,
ஆகாயம் கிழியாமல் காப்பாற்ற!
"ஏ மழையே நின்றுவிடு!
சந்திர வெளியை விட்டுவிடு!
கோடிகள் எல்லாம் ஈடாகா,
என் கவிதைகள் தருகிறேன் உனக்காக! ஏ மழையே நின்றுவிடு!"
குடைபிடித்தும் நனைந்தேன் நான்!
என்சொல் கேளாமல் விழுகின்ற துளிகளில்,
என்னையும் உணராமல் கரைந்து போகிறேன்!
குளிர்ந்த காற்றில் மிதக்கும் சாரலில்,
என்னைக் கழற்றி நனைந்து மகிழ்கிறேன்!
இப்போது வானம் உடைந்தாலும் எனகென்ன!
சொர்க்கம் என் அருகினில் மழையாய்ப் பொழிகையில்...
- Rajkumar PP
மழையில் நனைகின்றது!
சூரியனும் இல்லை..சந்திரனும் இல்லை
நின்று குடைபிடிக்க!
விண்மீன்கள் இருக்கும் இடம் கூடத் தெரியவில்லை!
வானம் மறைந்து விட்டால்,
கவிதைக்கு எங்கே செல்வேன்?
கண்ணாடிக் குடையுடன் எழுகின்றேன்,
ஆகாயம் கிழியாமல் காப்பாற்ற!
"ஏ மழையே நின்றுவிடு!
சந்திர வெளியை விட்டுவிடு!
கோடிகள் எல்லாம் ஈடாகா,
என் கவிதைகள் தருகிறேன் உனக்காக! ஏ மழையே நின்றுவிடு!"
குடைபிடித்தும் நனைந்தேன் நான்!
என்சொல் கேளாமல் விழுகின்ற துளிகளில்,
என்னையும் உணராமல் கரைந்து போகிறேன்!
குளிர்ந்த காற்றில் மிதக்கும் சாரலில்,
என்னைக் கழற்றி நனைந்து மகிழ்கிறேன்!
இப்போது வானம் உடைந்தாலும் எனகென்ன!
சொர்க்கம் என் அருகினில் மழையாய்ப் பொழிகையில்...
- Rajkumar PP