உலக மகளிர் தின சிறப்பு கவிதை!
அளவில்லா அன்பினை அளித்தாய்!
ஆறுதலை உயிர் வாழ்வினில்
நிறைத்தாய்!
இதழ் தரும் புன்னகையால் இனிமை
தந்தாய்!
ஈன்றெடுத்த அன்னையாய் பேருவகை
கொண்டாய்!
உள்ளம் தெளிவுபெற உபதேசம்
செய்தாய்!
ஊக்கம்தனை கொடுத்து உற்சாகம்
தந்தாய்!
எண்ணிய எண்ணங்களுக்கு நல்வண்ணம்
தந்தாய்!
ஏராளக் கவிகளுக்கு எழில்வடிவம்
கொடுத்தாய்!
ஐயம் சிறிதுமில்லை பெண்ணே, உன் பெருமையில் இன்றும் எனக்கு!
ஒப்பற்ற உலகத்தில் ஒற்றுமை
வளர்த்து,
ஓயாத அமைதியெனும் ஆனந்தத்தை
அள்ளி வழங்க,
ஔடத பெட்டகமாய் இந்த புவியினில்
வாழ்கிறாய்!-பெண்
என்ற
பெயரினைத் தாங்கி!
-கவிஞர் பானு அவர்களின் படைப்பிலிருந்து!
-கவிஞர் பானு அவர்களின் படைப்பிலிருந்து!
அருமையான வரிகள்! வாழ்த்துகள்.
ReplyDelete