இந்தத் தொடர் பதிவை வெளியிட ஊக்கமளித்த நண்பர்களுக்கும்,தகவலுக்கு உதவியாய் இருந்த traditionalgames.in இணையதளத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொக்கு பற பற...
இன்றளவும் கிராமங்கள் மற்றும் பள்ளிகளில், 5 முதல்
10 வயதுவரையிலான குழந்தைகளால் விளையாடப்படும் விளையாட்டுகளில்
இதுவும் ஒன்று.
வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி, அறிவுக்கும்
விருந்து படைக்கும் அற்புதவிளையாட்டு இது.இந்த விளையாட்டின் முக்கிய நோக்கம்,பறக்கின்ற
உயிர்களுக்கும்,மற்றவைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதே
ஆகும்.அதுமட்டுமன்றி, கீழே குறிப்பிட்டுள்ள மறைமுக நன்மைகளும் உள்ளன.
1.தெளிவாக கவனிக்கும் திறன்.
2.சொல்வதை விரைவாகப் புரிந்துகொள்ளும் திறன்.
இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போமா?
விளையாடத் தேவை:
1.குறைந்தது 8பேர் (அதிக குழந்தைகள்
இருந்தால் இன்னும் நலம்!)
2.அமைதியான இடம் (அனைவரும் சிரமமின்றி அமர ஏதுவாக இடம்
இருத்தல் அவசியம்)
விளையாடும் முறை:
1.அனைவரும் வட்டமாக அமர்ந்து கொள்ளவேண்டும்.இரண்டு
கைகளையும் நிலத்தில் வைத்திருங்கள்.
2.குழுவினரை வழிநடத்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.அவர்
கட்டளைகளின் படி மற்றவர்கள் செயல்படவேண்டும்.
3.வழிநடத்துபவர், ஏதாவது ஒன்றைச் சொல்லி
இறுதியில் "பற பற" என்ற வார்த்தையைச் சேர்த்து சொல்ல வேண்டும்.
உதாரணமாக, கொக்கு பற பற என சொன்னால், மற்ற
குழந்தைகள், "கொக்கு பற பற" என்று சொல்லிக்கொண்டு,பறப்பது
போல் கைகளை அசைத்துக் காட்டவேண்டும்.
அன்றி, "செங்கல் பற பற" என்றால்,
குழந்தைகள் அந்த வார்த்தையை சொல்லவோ,செய்கைகள்
செய்யவோ கூடாது.அப்படி செய்தால், செய்பவர் ஆட்டத்திலிருந்து
விலக்கப்படுவார்
4. ஆக. குழுவில் இருப்பவர்கள், வழிநடத்துபவர்
சொல்வதை கவனமாக,தெளிவாகக் கேட்க வேண்டும்.சொல்பவை பறப்பவையா அல்லது
பறக்க இயலாதவையா என்பதை உணர்ந்து வேகமாக செயலில் காட்ட வேண்டும்.
5. வழிநடத்துபவர், ஆட்டத்தைத்
துவங்கும்போது மெதுவாகச் சொல்லியும்,போகப் போக வேகத்தைக்கூட்டியும்
கட்டளை இட வேண்டும். இதனால், வட்டம் சுருங்கத்
துவங்கும்.இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருப்பவருக்கு பரிசு தரலாம்.
6. மீண்டும் வட்டமாக அமர்ந்து வேறு ஒருவர் வழிகாட்டியாக
செயல்பட வைத்து விளையாடத்துவங்கலாம்.ஆர்வம் குறையும் வரை விளையாடலாம்! குறைந்தது மூன்று சுற்றுகள் விளையாடுவது
நன்று.
For English version:
...ம்... அந்தக்கால ஞாபகம் வந்தது...
ReplyDelete