Monday, December 17, 2012

தமிழில் பேசுவது கேவலமான ஒன்றா?

இனிய தமிழ்மொழியில் ஓரிரண்டு வாக்கியங்களை ஓசை பட,இலக்கணப்பிழையின்றி நண்பர்களுடன் நம்மால் பேசமுடியுமா? 

நான் பேசினேன்.சிரித்தார்கள்.ஏதோ கோமாளித்தனம் செய்துவிட்டவானாய் என்மேல் ஏளனப்பார்வை வேறு.என்னைப் பார்த்து அவர்கள் சிரிக்கவில்லை.அப்படியானால் எதற்குச் சிரித்தார்கள்? நான் பேசிய தமிழைக்கேட்டா? ஏன் அப்படி? தமிழ்நாட்டில்,தமிழ் மக்களுடன் தமிழில் பேசுவது என்ன அவ்வளவு கேவலமான ஒன்றா? வியப்பளிக்கிறது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
  என பாரதி சொன்னார்.அதன்படி பிறநாட்டு செல்வங்கள் திரட்டப்போய், அவர்களின் கலாச்சார மோகத்திற்குள் நாம் வீழ்ந்துகிடக்கிறோம்.

அவர் எதற்கு பயந்தாரோ அது நடந்துவிடும் போல இருக்கிறது.
"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"


தமிழ்நாட்டிற்குள்ளேயே இந்த நிலைமை எனில், வெளிநாடுகளில்? இந்தக்காணொளியைப் பாருங்கள்.கண்ணீர் வரவழைக்கும் தமிழின் எதிர்காலம் பற்றிய குறும்படம்.

 



4 comments:

  1. நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதன் காரணமாக...

    ReplyDelete
  2. @Senthil kumar :

    முடிந்தவரை நம் நண்பர்கள் தமிழுக்குச் செய்யும் அவமதிப்புகளை மறைமுகமாக உணர்த்திட வேண்டும்! அது ஒன்று மட்டும் நம்மால் முடியும்.அதுபோல நாமும்,நம் இல்லங்களில் ஆங்கிலக் கலப்பில்லாதா தமிழில் பேச முயற்சிக்கவேண்டும்!!

    ReplyDelete
  3. என் உரையாடலில் மிகக் குறைந்த பிற மொழிச் சொற்களே இருக்கும்.

    சிரிப்பவரைக் கடுமையான சொற்களால் சாடிவிடுவதும் உண்டு.

    பதிவுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  4. @பசி பரமசிவம் :
    மிக்க மகிழ்ச்சி..அனைவரும் இதனைப் பின்பற்றவேண்டும் என நினைக்கிறேன்!

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்