போன வாரத்தில், ஒரு மாலை நேரம்.
நான் எங்கள் தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தேன்!
மஞ்சள் மற்றும் கரும்புப் பயிர்கள் மழைக்கு ஏங்குவதைப் பார்க்கும்போது வருத்தமாய் இருந்தது.
இரண்டு காவல் நாய்கள் அங்கு இருக்கின்றன.
என்னுடன் விளையாடும் அளவுக்கு அவைகளுக்கு நேரம் இல்லை என்பது எனக்கு தெரியும்.
ஆகவே அவைகளை நான் தொந்தரவு செய்வதில்லை.
சில கோழிக்குஞ்சுகளையும் அங்கு வளர்க்கின்றோம் பிற்கால இறைச்சியை நோக்கி.
மொத்தம் எட்டுக் குஞ்சுகள் இருக்கின்றன.தோட்டத்தில் அவை அங்கும் இங்குமாக எங்கும் சென்று இரைதேடினாலும்,
இறுதியாக கூண்டுக்குள் வந்துவிடும். அப்படி அவை கூண்டுக்குள் அடையும் போது,நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.
7 தான் இருந்தது.மீண்டும் எண்ணிப் பார்த்தேன். மாற்றம் இல்லை.
ஒன்றைக்காணவில்லை என்பது உறுதி.
எங்கள் நாய்களில் ஒன்று, இதுபோல கோழி வேட்டைகளில் ஈடுபடுவது தெரிந்த ஒன்று.
இன்று அது கட்டிவைக்கப்பட்டிருந்ததால், அது ஏதும் செய்திருக்காது என்ற
நம்பிக்கையுடன் தோட்டம் முழுவதும்தேடிப்பார்க்க விரைந்தேன்.
எனது சத்தத்துக்கு மறு சத்தம் வரவே இல்லை..ஆகவே, கீழாக பார்வையை ஓட்டியபடி நடந்தேன்.
அய்யோ!
அங்கே இரத்தம் சொட்ட சொட்ட, கத்தக்கூட தெம்பு இல்லாமல் அந்தக்குஞ்சு கிடந்தது. இறக்கை, கழுத்து
என பல காயங்கள். நான் அப்படியே எடுத்துச் சென்று, சிறிது தண்ணீரை தெளித்தேன். உயிர் இருந்தது.
பின்னர் அதை வீட்டுக்கு எடுத்துவந்து, காயங்களுக்கு மருந்து வைத்தபிறகு தான் அது நடக்கத் துவங்கியது.
மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
என் அப்பா, காயங்களைப் பர்ர்த்தவுடன் சொன்னார், இது கீரி செய்த வேலை என்று.
தோட்டத்தில் உள்ள மீத குஞ்சுகளையும் வீட்டுக்கு கொண்டு வந்துவிடலாம் என முடிவு செய்தோம்.
அன்று இரவு, ஒரு உயிரைக்காப்பாற்றிய மகிழ்ச்சியில் நன்றாக உறங்கினேன்!!

கோழிக்குஞ்சு ஏன் அப்படி அடிபட்டு விழுந்து கிடந்தது என தெரியுமா?
ReplyDeleteகீரி செய்த வேலை நண்பரே! கீரி, கோழிக்குஞ்சினைக் கொல்ல நடத்திய தாக்குதல், எங்கள் மற்றொரு நாயினால் தடுக்கப்பட்டது.
ReplyDeleteஆகவே, கீரி அதனைக் கொல்லாமல் விட்டு ஓடிவிட்டது..
dai , briyaniku aasa paatu nee thaan keeri vesam potruka . olunga unmaya sollu Raj .
ReplyDeleteஎன்னைப்பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் நண்பனே!
ReplyDeleteகடிக்க வரும் நாயைக் கூட கருணையுடன் தடவிக்கொடுக்கும் உள்ளம் எனக்கு!!
நீ சொன்னது போல ,இதில் பிரியாணி பண்ணியிருப்பேன் அது செத்துப்போயிருந்தால்!