Monday, September 5, 2011

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

பனியில் மறைந்த நிலவின் ஒளியில்,
ஈரம் தொலைத்த இரவுக் காற்றில்,
நட்சத்திரங்களைத் தேடி
நடுரோட்டில் பயணம்!

வண்ணம் காய்ந்திடா  வானவில்காண,
மண்ணில் மறைந்த மழைக்குள் தேடல்!

என்னைத் தொடரும் நிழலுக்கும்
உன்னைப் பிடிக்கிறதே அது ஏன்?
மறக்கச் சொல்லி நீ சென்ற பிறகும்,
மனது கேட்கவில்லை அது ஏன்?
உன்னைக் காதலித்தேனே அதில் தவறா?
உண்மையாய் காதலித்தேனே அதன் விளைவா?

உன் பெயரைச் சொன்ன உதடுகள்,
உன் முகம் மட்டும் நினைத்த நினைவுகள்,
உன்னுடன் நடந்த பாதைகள்,
உனக்கென எழுதிய கவிதைகள்-இன்று 
இவைதவிர எதுவும் நினைவிலில்லை எனக்கு !

சாலை ஓரத்தில்,
பேருந்து நிறுத்தத்தில்,
பசி மறந்து ,வெற்றிலைக் கறை படிந்த சுவரில் மயங்கிச் சாய்கையில்,
இறுதியாய் மூச்சும் என்னை பிரியத் துணிகையில்,
உன்னை நினைத்தே உலகை நீங்கும் நான்
யாரோ சொல்லிக்கேட்ட கடைசி வார்த்தை, " பாவம் இந்த பைத்தியகாரன்!".

3 comments:

  1. அற்புதமானப் படைப்பு . உயிர் பிரியும் நேரத்தில் மீண்டும் உயிர்பிக்கிறது அந்தக் காதல்

    ReplyDelete
  2. வலிகளை கூட நேர்த்தியாய், கூறி நெஞ்சத்தை கனக்க வைத்த கவிதை

    ReplyDelete
  3. வண்ணம் காயாத வானவில்காண,
    மண்ணில் விழுந்த மழைக்குள் தேடல்!

    Nice lines...

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்