அமரர்.கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
"பொன்னியின் செல்வன்" புதினத்தைப் படித்தபிறகு அவரது முழு ரசிகனாக மாறியவர்களுள்
நானும் ஒருவன்.
அதற்குப்பிறகு, எழுதியவர் கல்கி என்றால்,
பார்க்கின்ற கதைகளைப் படிக்கத் துவங்கிவிடுவேன்.அப்படியாக, நான்
வாங்கிப் படித்த சிறுகதைத் தொகுப்பு "வீடு தேடும் படலம்".
அதில்,புத்தகத்தின் தலைப்பாய் கதையின்
தலைப்பு கொண்ட, "வீடு தேடும் படலம்" என்ற சிறுகதையைப் பற்றி கொஞ்சம்
சொல்ல ஆசைப்படுகிறேன்.
கதையை எப்படி வேண்டுமானாலும் துவங்கலாம்.ஆனால், அந்தத்
துவக்கத்தை, கதையுடன் பொருத்துவது எப்படி என பலர் குழம்புவார்கள்.அப்படி
எந்தக் குழப்பமும் இல்லாமல் கதை துவக்கப்பட்டுள்ளது அருமை.
அந்தத் துவக்கம் இதோ!
"துவாபர யுகத்து பெர்னார்ட்ஷா என்று பெயர் பெற்ற
புரொபஸர் வேதவியாசர் மொத்தம் மூன்றரைக் கோடி வார்த்தைகளைக் கொண்ட பதினெட்டுப்
புராணங்களை இயற்றினார் அல்லவா! அந்தப் பதினெட்டுப் புராணங்களையும் நைமிசாரண்ய
வனத்தின் சூத புராணிகர் சௌனகாதி முனிவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவ்வளவையும்
கேட்டுவிட்டு அம்முனிவர்கள் "அடடா! பதினெட்டுப் புராணத்திற்குப் பிறகு
பத்தொன்பாவது புராணம் இல்லாமற் போய் விட்டதே! இனிமேல் நாங்கள் எதைக் கேட்டுக்
கொண்டு தூங்குவோம்?" என்று புலம்பினார்கள். அதற்குச்
சூதர், முனிவர்களே கவலை வேண்டாம். பத்தொன்பதாவது புராணமாகிய கலி
புராணம் ஒன்று இருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டே நிம்மதியாக தூங்குங்கள்!"
என்று சொல்லி கமண்டலத்திலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீர் ஆசமனம் செய்துவிட்டு,
பத்தொன்பதாவது கலி புராணத்தைக் கூறத் தொடங்கினார்.
அவ்வளவு
பெருமை வாய்ந்த கலி புராணத்தில் நாட்டுப் படலத்துக்கும் நகரப் படலத்துக்கும்
அடுத்தபடியான வீட்டுப் படலம் வருகிறது. வீட்டுப் படலம் என்றும் சொல்லலாம்! வீடு
தேடும் படலம் என்றும் சொல்லலாம்! அல்லது ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டும்
இருக்கலாம். எனினும் "கடமையைச் செய்யுங்கள்!" "கடமையைத் தானே
செய்யுங்கள்!" "கடமையைக் கட்டாயம் செய்யுங்கள்!" என்று பகவத்
கீதையில் பேராசிரியர் கிருஷ்ணபகவான் முக்காலே மூன்று வாட்டியும் கதறியிருப்பதை
முன்னிட்டு, இங்கே நாம் எம் கடமையைச் செய்யத் தொடங்குகிறோம்."
துவக்கம் முதலே வார்த்தைகளில் நகைச்சுவை நெடி
மிதக்கிறது.
வார்த்தைகள் படிப்பவர்க்கு புத்துணர்வூட்டுகின்றன.
கடோத்கஜராவ் என்ற
ஒருவர், தமது பெரிய குடும்பம் தங்க வீடு பார்க்கிறார்.அவர் குறைந்த
விலையில், பேய்கள் இருக்கின்றன என்று சொல்லப்படும் வீட்டை வாங்கத்
துணிகிறார்.
பிறகு என்ன நடந்தது என்பது கதை.முதல் முறை அங்கு சென்றபோது,பேயுடன்
பேச்சுவார்த்தை நடத்துகிறார்.அந்த வரிகளை நினைக்கும்போதே வியப்பு மேலிடுகிறது.என்ன
ஒரு கற்பனை! அந்தப் பேச்சுவார்த்தையின் துவக்கம் இதோ!
"யார் அது?" என்றார் கடோ த்கஜராவ்.
"நீ யார்?" என்றது ஒரு கம்மலான குரல்.
"நான் இந்த வீட்டை வாடகைக்கு வாங்கிக் கொண்டு குடி வரப் போகிறேன். நீ யார்" என்றார் ராயர்.
"உனக்கு முன்னால் நான் குடி வந்தவன், உனக்கு இங்கே இடமில்லை. போய்விடு!"
"வீட்டு வாடகை அதிகாரியிடம் நீர் அநுமதி பெற்றுக் கொண்டீரா?"
"நீ யார்?" என்றது ஒரு கம்மலான குரல்.
"நான் இந்த வீட்டை வாடகைக்கு வாங்கிக் கொண்டு குடி வரப் போகிறேன். நீ யார்" என்றார் ராயர்.
"உனக்கு முன்னால் நான் குடி வந்தவன், உனக்கு இங்கே இடமில்லை. போய்விடு!"
"வீட்டு வாடகை அதிகாரியிடம் நீர் அநுமதி பெற்றுக் கொண்டீரா?"
"இல்லை"
"அப்படியானால் இரண்டு பேரும் விண்ணப்பம் போடுவோம். யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் இருக்கலாம்."
"அப்படியானால் இரண்டு பேரும் விண்ணப்பம் போடுவோம். யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் இருக்கலாம்."
நான்
அடிக்கடி படித்துப் பார்க்கும் சிறுகதை இதுதான்.
படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறதே...
ReplyDeleteஇணையத்தில் படிக்க தொடர்பினை இணையுங்கள்...
நன்றி...
தங்களைப்போல் நானும் கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு முதலிய புதினங்களை படித்துள்ளேன்.வரலாற்றுப் புதினங்கள் எழுதுவதற்கு அவறை மிஞ்சிட எவரும் இல்லை.
ReplyDelete