Tuesday, August 14, 2012

நள்ளிரவில் சுதந்திரம் ஏன்?


ஆங்கில அரசு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாக சட்டம் இயற்றியது. நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர். 17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாள்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர். 

ஐவஹர்லால் நேருவிடம் இதுபற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார். சட்டம் இயற்றியாகிவிட்டது. இனிமாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்துவிட்டது. நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர். 

ஆங்கிலேயர்களுக்கு புதியநாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கிவிடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத்தான் தொடங்குகிறது. எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர். இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.

Thanks to Dinamani.

6 comments:

  1. அறியாத புதிய தகவல்... பகிர்வுக்கு நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. 14 -ஆகஸ்ட்-1947 இரவு 11:55 மணிக்கு கூட அஷ்டமிதானே?

    ReplyDelete
  3. ஜோதிடம் அறிந்தவரா தாங்கள்?? இந்தக் கட்டுரை, தினமணி நாளிதழில் வெளியாகியுள்ளது. அவர்களையும் நாம் இதே கேள்வியைக் கேட்கவேண்டும்!!
    http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Sunday%20Kondattam&artid=643500&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=

    ReplyDelete
  4. கிளிச்சாய்ங்க. அவிக சுதந்திரம் வாங்கின லக்னத்தோட எஃபெக்டுதான் இன்னைக்கும் நிமிர முடியல

    மேலதிக விவரங்களுக்கு http://anubavajothidam.com/cities-dark/

    ReplyDelete
  5. இந்த அஷ்டமி, நவமி பிரச்சினையை கிளப்பியது நம்ம ஊர் இராஜாஜியும் TTK னு சொல்ற TTகிருஷ்ணமாச்சாரியும் தான் என்பது தெரியுமா.....

    ReplyDelete
  6. தகவலிற்கு நன்றி...

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்