முக்கிய நடிகர்கள் :
விமல்,இனியா,பாக்கியராஜ்,பொன்வண்ணன்
கதைச்சுருக்கம்:
1966ஆம் ஆண்டு:
எங்க வீட்டுப்பிள்ளை படத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள் நம்பியாரிடம் சவுக்கடி வாங்கும் காட்சியை திரையரங்கில் பார்க்கும் ஒரு நரிக்குறவன் கோபமடைந்து,நம்பியாரை துப்பாக்கியால் சுடும் காட்சியுடன் அமர்க்களமாக துவங்குகிறது படம்.
சர்க்கார் உத்தியோகம் தான் சமுதாயத்தில் மதிப்பையும், சொந்தத்தில் ஒரு மரியாதையையும் கொடுக்கும்.ஆக தன்னால் முடியவில்லை என்பதால் மகனையாவது அரசாங்க வேளையில் அமர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட சராசரி அப்பாவாக இறுதிவரை வலம் வரும் பாக்கியராஜ் முருங்கைக் காயுடன் அறிமுகமாகிறார்..
விமல் படிப்பை முடித்து ஆசிரியர் வேலைக்கு சேர விழையும் நடுத்தர குடும்பத்து இளைஞன்.தந்தையின் விருப்பப்படி,கிராம சபா அமைப்பு அளிக்கும் சம்பளம் மற்றும் சான்றிதழுக்காக "கண்டேடுத்தான்காடு" என்ற கிராமத்துக்கு,வாத்தியாராக செல்கிறான் நமது கதாநாயகன்."செங்கல் சூலைக்காரா" என்ற பாடலுடன் கிராமம் நமக்கு அறிமுகமாகிறது.
செங்கல் சூளையில் கல் அறுக்கும் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட விமல் படும் பாடு,தேநீர்கடை வைத்திருக்கும் பெண்ணாக வரும் கதாநாயகி இனியா, தனது காதலை வாத்தியாருக்கு புரியவைக்க எடுக்கும் முயற்சிகள்,மக்களை அடிமையாக நினைக்கும் பொன்வண்ணனுக்கு ஊர்மக்கள் கொடுக்கும் பதிலடி ஆகியவற்றை மையமாக வைத்து கதை நகர்கிறது.
விமல் குழந்தைகளுக்கு கல்வி புகட்ட எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைந்ததா?இனியாவின் காதல் கைகூடியதா ? விமலுக்கு சர்க்கார் உத்தியோகம் கிடைத்ததா? அன்றாட உணவுக்கு படியளக்கும் பொன்வண்ணனை பகைத்த ஊர்மக்களின் நிலை என்ன? என்பதற்கு பதில் தான் மீதி கதை.
அருமை:
காட்சியமைப்பு
கதையோடு தொடர்புடைய பாடல் வரிகள்
யதார்த்தமான வசனங்கள்
இனியாவின் இயல்பான நடிப்பு
கதை முழுக்க நம்முடன் உறவாடும் ஊர்மக்கள்
குழந்தை நட்சித்திரங்கள்
.
இயக்குனருக்கு:
நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
மின்சாரம் ,தொலைகாட்சி இல்லாத அந்தக் கால மக்கள் வாழ்க்கையையும் , இளமைக்கல்வியின் மகத்துவத்தையும் உணர வைத்த மனதைத் தொடும் திரைப்படத்தை கொடுத்ததற்கு நன்றிகள்.
No comments:
Post a Comment
படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்