இன்றைய பதிவினை ஒரு அறிவுரையுடன் ஆரம்பிக்கலாம்.
"காதல் திருமணம் செய்யுங்கள்
ஆனால் பெற்றோறை எதிர்த்து திருமணம் செய்யாதீர்கள்......
செய்தால் அது காதல் திருமணம் அல்ல.
ஏனெனில்,
இன்றுவரை காதலித்த பெற்றோரின் உண்மைக்காதல் புரியாத
உங்களுக்கு உங்கள் காதல்
புரிந்திருக்க வாய்ப்பில்லை!"
இந்த சின்ன அறிவுரை புரியாமல் பலர் பலரை, கண்ணீரில் மிதக்கவிட்டிருக்கிறார்கள்! இனியும்
வேண்டாமே!
சரி. நான் சொல்ல வந்ததே வேறு.
இந்த வாரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பரபரப்பான வாரம்.
சோ மற்றும் உளவுப்படையின்
உதவியால், பல உண்மைத்தகவல்கள் வெளிவந்ததால், "சினேகிதியே" என்று முதல்வரைப் புகழ்ந்த உயிர் தோழி,
"ஒய் திஸ் கொலவெறி டி" எனப் பாடும் அளவுக்கு அதிரடியாக விரட்டப்பட்டார். அடுத்த முதல்வர் கணிப்பு,
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது என தினம் தினம் அடுக்கடுக்காக காரணங்கள் குவிகின்றன.இது எங்கு முடியும் என
இந்த வருட முடிவுக்குள் தெரியவரும்.

நன்றாக இருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் எனக் கொக்கரிக்கும் கேரள அரசினை, தமிழ் புலிகள் மிரள வைத்துக்
கொண்டிருக்கின்றன.மத்திய அரசின் தலையீடு இதுவரை இல்லை என்பதால், இது பெரும் வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.விரைவாக எதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பார்க்கலாம்.
அதை எல்லாம் விட, முக்கிய செய்தி.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்! கொண்டாடி மகிழுங்கள்!! அடுத்தவாரம் சந்திப்போம்!
(நான் சொந்த ஊர் செல்ல இருப்பதால் நேரம் கருதி, இந்தச் செய்தி இத்தோடு முடிகிறது)
"காதல் திருமணம் செய்யுங்கள்
ReplyDeleteஆனால் பெற்றோறை எதிர்த்து திருமணம் செய்யாதீர்கள்......
செய்தால் அது காதல் திருமணம் அல்ல.
ஏனெனில்,
இன்றுவரை காதலித்த பெற்றோரின் உண்மைக்காதல் புரியாத
உங்களுக்கு உங்கள் காதல்
புரிந்திருக்க வாய்ப்பில்லை!"
உண்மையான வரிகள் நன்றி .