Tuesday, April 9, 2013

தீ பற்றிய தகவல்கள்!! -தீ பற்றி கொண்டால் என்ன செய்ய வேண்டும்?


நெருப்பு / தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் .
வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறது.
அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம்.

நெருப்பு என்றால் என்ன ?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும்தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது . நெருப்பு என்பது நான்கு காரணிகள் உள்ளடக்கியது .


  • வெப்பம்
  • ஆக்சிஜன்
  • எரிபொருள்
  • தொடர்வினை 
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன .
அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .

நெருப்பு 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது

  • Class A நெருப்பு
  • Class B நெருப்பு
  • Class C நெருப்பு
  • Class D நெருப்பு
1.Class A நெருப்பு:

சாதாரணமாக பேப்பர் , மரம் , துணி போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது.
அணைக்கும் முறை:
இந்தநெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும்.
தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது .எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது .\
தீயணைப்பான்:
இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class Aதீ ணைப்பான்களை ( Class A Fire Extinguishers ) பயன்படுத்தலாம் .

2.Class B  நெருப்பு :
எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது.
அணைக்கும் முறை:
இந்தமாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் Class A தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினதுபோல அநேகர் செய்கின்றனர் .
ஆனால் அது தவறான நடவடிக்கை.
இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும் , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் , நெருப்பு அதிகமாகும்.
 தீயணைப்பான்:
இந்த வகையான நெருப்பை அணைக்க CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப் பட்டு தொடர்வினை நிறுத்தப்படும்.

3.Class C தீ / நெருப்பு :
மின்சார தீ இந்த வகையில் வருகிறது
அணைக்கும் முறை: 
 இப்படி தீ ஏற்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் .
அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா என்பதை அறிந்து அதற்கேற்ற தீ அணைப்பானை பயன்படுத்த வேண்டும் .

4.Class D தீ / நெருப்பு :
தொழிற்சாலைகளில் உள்ள சோடியம் , பொட்டாசியம் , டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது .
 தீயணைப்பான்:
சோடியம் க்ளோரைட் எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் .

தீ பிடித்தால் செய்ய வேண்டியவை: 

  • பதட்டப்படாதீர்கள் பதறிய காரியம் சிதறும்.தீ தீ என்று சத்தமிட்டு அனைவரையும் உஷார் செய்யுங்கள்
  • தீ அணைக்க கூடிய அளவில் இருந்தால் அணைக்க முயற்சி செய்யுங்கள்.
  • பெரும் தீ என்றால் தீ அணைப்பு நிலையத்திற்கு அழைப்பு கொடுத்து விட்டு அவர்கள் அந்த இடத்தை அடைவதற்கு தேவையான் வசதிகளை செய்து கொடுக்கலாம்
  • உயிருக்கு கேடு என்றால் தயவு செய்து இடத்தை காலி செய்யுங்கள் .
  • உங்கள் உயிருக்கு முன் உடமைகள் ஒன்றும் இல்லை.


 நன்றி:Kodai fm 100.5 (கொடைக்கானல் பண்பலை 100.5)

 
 



No comments:

Post a Comment

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்