Friday, April 19, 2013

கன்னித்தமிழே வருக வருக!

நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு பொது அறிவு பதில், "தமிழ் என் தாய்மொழி!".சில பேருக்கு இது மறந்துவிட்டது என நினைக்கிறேன்.பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?ஆங்கிலமொழியின் அதீத பயன்பாட்டினால் தமிழ் பேசவும்,தமிழைப் பற்றி சிந்திக்கவும் நேரம் கிடைப்பதில்லை.வேற்று மொழி கற்கும்போது கூட,அவர்கள் சொல்லும் முதல் அறிவுரை,தாய்மொழியின் வீச்சினைக் கட்டுப்படுத்துங்கள் என்றுதான்.(Kill your Mother toungue influence -Eg.Think in English, Speak in English).கட்டுப்படுத்திக் கட்டுப்படுத்தி, இன்று தாய்மொழி காணாமல்போய்விட்டது பலரின் நாவில்.




ஒருநாள்,உணவு இடைவேளைப் பொழுதில் இதுபற்றிய பேச்சு எழுந்தது."தமிழ் விழிப்புணர்வு இன்றைய இளைய சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறதா?" என்று.அனைவரும் ஆம் என்றே சொன்னார்கள்.கமலுக்கு ஆதரவாய் தமிழர் அனைவரும் உன் பின்னால் நிற்போம் என்கிறது ஒரு கூட்டம்

தனி ஈழம் எங்கள் கொள்கை.அங்கிருப்பவர்களும் எங்கள் உடன்பிறப்புகளே என்று பொங்கி எழுகின்றது ஒரு கூட்டம்."சென்னை சூப்பர் கிங்க்ஸ்-க்கு பெரியவிசில் போடு" என ஆர்ப்பரிக்கிறது ஒரு கூட்டம். 

எப்படியோ,தமிழன் என்ற வார்த்தை ஏதோ ஒரு வகையில் அனைவரிடமும் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.அதேபோல, தமிழ் மொழிப்பற்று காட்டுத்தீயாய் பரவி வருவது இன்னொரு இனிப்புச் செய்தி.சமூக வலைதளங்கள்,இணையங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தமிழ் சங்கங்கள்,தொலைக்காட்சி என மொழி விழிப்புணர்வினை ஏற்படுத்த ஏராளமான ஊடகங்கள் தற்போது காணக்கிடைக்கின்றன.உதாரணமாக,

சில உணர்வுகள் எல்லை மீறும்போது,அதன் விளைவுகள் கொஞ்சம் அச்சத்திற்குரியவையே.தமிழ்பற்று என்ற பெயரில் நாம் பார்ப்பவற்றையெல்லாம் மொழிமாற்றம் செய்யத்துணிகிறோம்.உதாரணமாக,FaceBook என்பதை முகப்புத்தகம் என்று அழைப்பதைப் பார்க்கமுடிகிறது.அது ஒரு நிறுவனத்தின் பெயரல்லவா?அதை உள்ளபடி உபயோகிப்பதே சிறப்பு! All clear Shampoo' என்பதை "எல்லாம் முடிந்தது" என்றோ,Microsoft என்பதை "சின்ன மென்மை" என்றோ நாம் அழைக்கிறோமா?மொழிபெயர்ப்பினை பெயர்களுக்கு பயன்படுத்த வேண்டியதில்லை.இதுபோன்ற மாற்றங்கள் கவனிக்கப்படவேண்டியவை.

Google தேடுதளத்தில்,"தமிழ்" என்று தேடியதில் கிடைத்த செய்திகள் இங்கே.



அதேபோல"English" என்று தேடியதில் கிடைத்த செய்திகள் இங்கே.


படங்களாகட்டும்,இணையபக்கங்களாகட்டும், தமிழ் இலக்கியம் தொடர்பானவை மிகக் குறைவே.இரண்டுபக்கங்கள் தாண்டினால்,இன்னும் படுமோசமான முடிவுகளைப் பார்க்கமுடிகிறது.
தமிழ்மொழியின் இணைய இலக்கியப் பதிவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.தமிழ் கற்கும் தளங்கள் இன்னும் அதிகமாக துவக்கப்பட்வேண்டும்.நாளிதழகள் மற்றும் தொலைக்காட்சிகள் போல, தமிழ் பற்றிய அனைத்து புத்தகங்களும், இணையத்தில் படிக்கும்படி செய்யப்படவேண்டும்.

இன்றைய தமிழ்மொழி நிலை பற்றீய இன்னுமொரு பதிவு.இங்கே

இன்னும் பேசலாம் தமிழ்மொழியை சரியான பாதையில் வேர்விடவைக்க.

- அன்புடன் ராஜ்குமார் 

3 comments:

  1. நல்லது... சிறப்பான பாதை தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    இதையும் நேரம் கிடைப்பின் வாசிக்கவும்... (http://www.bloggernanban.com/2012/03/tamil-technology.html)

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ள பதிவு. இணையத்தில் தமிழை கவுரவமாக உலவவிட ஆசைப்படும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்!!

      Delete
  2. நல்ல கருததுள்ள பதிவு

    ReplyDelete

படித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்