Thursday, April 21, 2011

கோவை சாலையில் என்னவள் வருகிறாள்!!((எனது "காந்திபுரம் பஸ்ஸ்டேண்ட் பக்கத்துல" கதையிலிருந்து)

மாலை மயங்கும் நேரம் வானத்தில் கதிரவன்  கையசைத்து விடைபெறும் வேளையில்,
மேகத்துடனான பாசத்தில் பிரிய மனமில்லாத ஒளிக்கீற்றுகள் வண்ணங்களாய் ஜொலித்தன.

அது அவ்வளவு ரம்மியமான காட்சி!

சொர்க்கமோ அல்லது வேறு எதுவோ என கோவை சாலையை உணரவைத்த அவளை மறக்க முடியாது!
என்னின்று சில அடி தள்ளி வருகிறாள்!
இடையே காற்றைத்தவிர தடையேதும் இல்லை.

அந்த நகர நெரிசலில் தும்பையும்,ஈக்களும் எங்கிருந்து வந்தன?

தூய வெண்மையாய் தும்பை அவள் மீது உடையென படர்ந்ததுவோ?
சில வண்ணத் தும்பிகள்,தேன்பருக வந்தமர்ந்து பின்னர் அவள் முக அழகைப் பார்த்துக்கொண்டே உடல் தொட்ட மயக்கத்தில் மோட்சத்தை அடைந்தனவோ?
ஆமாம் வடிவமாய் அவள் உடையில் அவைகள்!!
மாலை நேர சில நட்சத்திரங்கள், இவளைப் பார்த்த மயக்கத்தில் வானிலிருந்து தவறிவிழுந்து,
பச்சைப் பாசியாய் அவள்மேல் படர்ந்த துப்பட்டாவின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டதோ?

இவை யாவும் நடந்து முடிந்த நேரத்தில், என் முன்னே அவள்- அன்று வரைந்த வண்ணம் காயாத ஓவியமாய் அவள் வருகிறாள்!!

Thursday, April 14, 2011

காதலியை இழந்தேன்

 (இத நான் எழுதல)

உலகம் சிறிது எனில்,
 அவளை விரைவில் சந்திப்பேன்.
உலகம் பெரிது எனில்,
அவளை விட அழகான பலரை சந்திப்பேன்!!

நம்பிக்கை வேணும் பாஸ்!! தீயா வேலை செய்யனும்!!

Thursday, March 24, 2011

மீண்டும் கல்லூரி

ஒவ்வொரு நாளும் நாம் எதையோ எதிர்பார்த்து எழுகிறோம்!

நொடிகளை விழுங்கி ,நிமிடங்கள் கரைகின்றன!

முற்றிலும் முடியாமல்,
முடிக்கவும் முடியாததாய் அன்றைய
எதிர்பார்ப்புகள்!

இப்படியே இன்றுவரை என் விடியல்கள்
ஒரு இனிய நாளை எதிர்பார்த்து!

இதோ
அந்த நாள்!

நான்கு வருடங்கள் ஓருயிராய் இருந்து,
கல்பட்ட தேன்கூட்டில் கலைந்து சென்ற
தேனிகளாக எல்லோரும் எங்கெங்கோ!
இன்று நாங்கள் சந்திக்கப் போகின்றோம்!

தோழ முகங்களைப்
பார்க்கப் போகிறோம் என்ற நினைவுகள்
கூட இனிப்பாய் இருக்கிறது!

ஒவ்வொரு நாளும் என் நாள்காட்டியில்
எப்போது வரும் என்று எதிர்பார்த்த தேதியல்லவா அது?

எத்தனை பேர்
என் பெயரை நினைவில் வைத்திருப்பார்களோ தெரியவில்லை!
ஆனாலும் கவலையில்லை.
என் மனதில் பதிந்த முகங்களுக்குப்
பரிச்சயமாகப் போகின்றேன்!

எல்லோரும் இப்படி  நினைத்திருந்த
எல்லாமும் நிஜமாகும் நாள் வந்தது இன்று!!
நண்பர்களே!
நாம் சேர்ந்த இந்நாளைக் கொண்டாடி மகிழ்வோம்!

இதன் பிறகு மீண்டும் பிரிவதை எண்ணாமல்-நாம்
சேர்ந்த இந்நாளைக் கொண்டாடி மகிழ்வோம்!!

Sunday, November 14, 2010

குழந்தைகள் தின வாழ்த்துகள்


  • அறியாமையின் அற்புதப் படைப்பு...
  • அன்பினைப் பெறும் கடவுளின் வடிவம்....
  • நாளைய உலகின் நம்பிக்கை....
  • குடும்பத்தில் மகிழ்ச்சிஒளி ஏற்றும் சிறு விளக்கு...
அனைத்து குழந்தைகளுக்கும்  குழந்தைகள் தின வாழ்த்துகள்

Wednesday, September 22, 2010

நண்பர்களே..எழுதுங்கள்


உள்ளச் சிந்தனைகளை உதட்டசைவில் விடாமல்,
உருகொண்ட பேனா மைகொண்டு சித்திரமாய்த் தீட்டிவிடு..
இன்றைக்கு அது வெறும் காகிதம்..
பிற்காலத்தில் அது ஒரு பொக்கிஷம்.!!!!


Saturday, September 18, 2010

அன்பு நண்பன் அஞ்சன் அனுப்பிய காதல் கவிதைகள்

                                     முத்தம்
அன்று அவன் முத்தம் கேட்டான்
அவள் சத்தம் போட்டாள்..
இன்று,
அவள் முத்தம் கொடுக்கிறாள்
சத்தம் இல்லாமல் அவன் "கல்லறைக்கு"..!!

                                   
                                                       **********

                             கல்லறை ரோஜா
இன்று என் கல்லறைக்கு அவள் வைத்த ரோஜாவை,
அன்று கையில் கொடுத்திருந்தால்,
இன்னும் சிலகாலம் உயிருடன் இருந்திருப்பேன்..!!

                                              ********************


                                   கண்ணீர்
எனக்காக நீ ஒரு துளி கண்ணீர் சிந்தினால் போதும் நான் என்னை மறந்து போவேன்..
என்னால் நீ ஒரு துளி கண்ணீர் சிந்தினால்,
அன்றே நான் இறந்துபோவேன்..!!

                                                             ~~~~~~~~~~~~~~~~~~~

கல்லூரியில் செய்முறை வகுப்புகள்


3 மணி நேர jolly lab ல Observation எழுதறது.

Lab hours ல கேண்டீன் சுற்றும் இன்பமான நேரம்.


Ctrl+c , Ctrl+V keys இன் பயன்பாடு.


common printerக்கு சண்டை.


அடுத்தவன் Fileல எடுத்து விளையடுறது.


Record indexல pageno கூட copy அடிக்கிறது.


Model labனு ஒரு மெகா காமெடி.


Sem practical ல pendrive use பண்றது


கடைசி நேர viva preparation.

 
எப்படியோ O/P verification வாங்கும் trick.


இப்படி எல்லாம் 2006 ல இருந்து 2010வரை இருந்த காலேஜ் லேப் சரித்திரம் முடிஞ்சு போனத கொஞ்சம் நினைச்சுப் பாருங்க..


Monday, September 6, 2010

காதல் தூது


உன்னின்று உதிரும் அந்தப் புன்னகைச் சாரல்
நெஞ்சக்கதவுடைத்து என்னுயிர் நனைத்ததே!! - உன்
சின்னக்கருவிழி அசைவினில் என்மனம் இசை பாடியதே!
இன்றோ..

நீ அனுப்பிய மேகத்தூது சொல்லியது யாதெனில்,
"மன்னவனே, என்னில் பதிந்த நீரினும் மிகையாய்
உன்னவள் உனை எண்ணி சிந்துகிறாள் கண்ணீர்" என்று.
இந்தச் செய்தி அறிந்தபோதினும்
உள்ளத்திணவொடு உனைக்காணாவிடில்
நம்முள்ளிருக்கும் அந்தக் காதலின் இனிமை குன்றுமென்று யானறிவேன் கண்மணியே..
சீறும் காற்றின் வேகம்தாண்டி உனைக் காண வருவேன் காத்திருப்பாயாக..

காதல் கவிதைகள் - rajkumar


                             ஜில் ஜில் காதல்

உச்சி முதல் பாதம் வரை
குச்சி ஐஸ் உருகுதடி-உன்
எச்சில் படாதா என்று..

                             அவள்
அவள் வாய் திறந்து பேசியதை
நான் பார்த்துக் கொண்டிருந்தேன் வாயைத் திறந்து...

                                         அன்பே!
இரவில் உன்முகம் காண விழையும் ஆவல் எனக்கும், நிலவுக்கும் ஒன்று தான்..!!
ஆனால்,
நிலவுக்குத் தடையாய் உன் வீட்டு மாடி..
எனக்குத் தடையாய் உன்னோட டாடி..!!!